நாட்டின் நிலைமை மிகவும் மோசம் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களிடம் :சஜித்

நாடு இந்த அளவு வைரஸினால் மோசமாக பாதிக்கப்படும் நிலையில் நாட்டை மூடினால் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய வரும் என்ற அச்சத்தில் அரசாங்கம் நாட்டை முடக்காமல் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டில் தற்போது பணம் இல்லை எனவும் அதற்கு காரணம் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பணம் படைத்தவர்களுக்கு வரிச் சலுகை வழங்கி பல வியாபாரங்களை முன்னெடுத்தமையே எனவும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெபரவெவ மெனிக் ரஜமகா விகாரைக்குச் சென்று ஆசி பெற்றுக் கொண்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத காரணத்தால் கொரோனா மரணம் மற்றும் பாதிப்பு அதிகரிப்பதாக அரசாங்கத்தால் ஒருபோதும் கூற முடியாது எனவும் தடுப்பூசி கொள்வனவு செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்திய போது அரசாங்கம் பானையை ஆற்றில் போட்டு பாணி பின்னால் ஓடியதாகவும் அவர் குற்றிப்பிட்டுள்ளார்.

அதனால் இந்த குற்றத்தில் இருந்து அரசாங்கம் தப்பிக் முடியாது எனவும் அவர் கூறினார்.

நாட்டின் தற்போதைய நிலை மிகவும் மோசம் என கூறிய சஜித் பிரேமதாஸ நாட்டு மக்கள் முன்னரை விட மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply