வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் கொரோனாவிற்கு பலி

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா (வயது 76) கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு, பொதுச் சுகாதார பரிசோதகரினால் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானது.
அதனை அடுத்து, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கடந்த 31ஆம் திகதி நகர சபை தவிசாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்த போதும், தமிழரசுக் கட்சியினால் அதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply