அமெரிக்காவில் ரெயிலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள முனி ஃபாரஸ்ட் ஹில் ரயில் நிலையத்தில் ரயிலுக்குள் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுய்ள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தபோது ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்துள்ளார்.
மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சான் பிரான்சிஸ்கோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக சான் பிரான்சிஸ்கோ காவல் துறை தெரிவித்துள்ளது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் ஒருவர் மற்றொருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply