இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் : சிரியா வீரர்கள் 3 பேர் பலி

கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இஸ்ரேலுக்கும் அதன் பக்கத்து நாடான சிரியாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. சிரியா மீது இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சிரியா டமாஸ்கஸ் நகரத்தில் உள்ள ராணுவ முகாம் மீது இஸ்ரேல் படையினர் நேற்று வான் வெளி தாக்குதலை நடத்தினார்கள்.

ஏவுகணைகளை வீசியதில் அங்கு பணியில் இருந்த சிரியா வீரர்கள் 3 பேர் இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஏவுகணை வீச்சில் சிரியாவின் பீரங்கிகள் சேதம் அடைந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply