காத்தான்குடியில் 14 வயது சிறுவன் மீது 20 வயது இளைஞன் கத்திக்குத்து
வீதியால் சென்ற 14 வயது சிறுவன் மீது குறித்த வீதியில் நின்ற 20 வயதுடைய இளைஞனொருவர் கத்திக்குத்தை மேற்கொண்டுள்ளார். கத்திக் குத்தையடுத்து படுகாயமடைந்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கத்திகுத்தை மேற்கொண்ட 20 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் காத்தான்குடி கர்ப்பலா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.
சம்பவதினம் மாலை வேளை குறித்த வீதியால் காயமடைந்த 14 வயதுடைய சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான். இதன் போது குறித்த வீதியில் நின்ற 20 வயதுடைய இளைஞன் சிறுவன் மீது கத்திகுத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து சிறுவன் கத்தியதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்ததுடன் கத்திகுத்து தாக்குதலை நடாத்திய இளைஞனை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த இளைஞனை கைதுசெய்ய பொலிஸார், கத்திக்குத்தை மேற்கொண்ட இளைஞன் போதைபொருளுக்கு அடிமையானவர் எனவும் இதனால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply