போதைப்பொருளுடன் கல்முனையில் ஒருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த  சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்முனை மதரஸா வீதியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்முனைக்குடி பகுதியை சேர்ந்த 34 வயதுடைய குறித்த சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் 870 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், அவர் பயன்படுத்திய கைப்பேசி என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அப்பிரதேசத்தில் பிரதான போதைப்பொருள் விற்பனை முகவராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply