இலங்கை பெண் மந்திரி இங்கிலாந்து குடிமகளாக அறிவிப்பு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு
இலங்கை பெண் மந்திரி டயானா கேமேஜ். சுற்றுலாத்துறை இணை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அவர் இலங்கை தூதரக பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அதை நிராகரித்த குடியேற்றப்பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரி, டயானா கேமேஜ் ‘இங்கிலாந்து குடிமகள்’ என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை ராணுவ அமைச்சக செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- டயானா கேமேஜ், 2004-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து குடிமகளாக இருக்கிறார். இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளார். இருப்பினும், 2014-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி இலங்கை பாஸ்போர்ட் பெற்றார். 2018-ம் ஆண்டு, தூதரக பாஸ்போர்ட்டும் பெற்றார்.
ஆனால், அவர் இங்கிலாந்து குடியுரிமையை கைவிட்டதாக கூறுவதை நிரூபிக்க எந்த ஆதாரமும் சமர்ப்பிக்காததால், அவருக்கு புதிதாக தூதரக பாஸ்போர்ட் வழங்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply