அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து : 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று முன்தினம் சிறிய ரக விமானம் ஒன்றில் 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள பிக் பியர் என்ற குடியிருப்பு பகுதி அருகே விமானம் சென்றுக் கொண்டிருந்தபோது, விமானம் திடீரென விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதையடுத்து, தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், பிக் பியர் பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி கிடந்ததை கண்டுபிடித்தனர். இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 3 பேரும் உயிரிழந்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply