3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தில் கொடபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று (03) மாலை 4 மணி வரை இந்த அபாய அறிவிப்பு செல்லுபடியாகும்.
இதேவேளை, நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று (03) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் மி.மீ. 100 வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply