ஜப்பான் முதலீட்டில் புறக்கோட்டை மிதக்கும் சந்தை மேம்பாட்டு திட்டம் : நகர அபிவிருத்தி அதிகார சபை

புறக்கோட்டை மிதக்கும் சந்தையை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஜப்பானிய முதலீட்டாளரொருவர் முன் வந்துள்ளார். அதற்கான ஆரம்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை (27) பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகாரசபையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர் அகிரா ஹிரோஸ் தலைமையில் கைசாத்திடப்பட்டுள்ளது.

அதன்படி, புறக்கோட்டை மிதக்கும் சந்தையின் முகாமைத்துவம் மற்றும் செயற்பாடுகள் இந்த ஜப்பானிய முதலீட்டின் மூலம் மேற்கொள்ளப்படும். இந்த மிதக்கும் சந்தை வளாகம் முறையாக நிர்வகிக்கப்படவில்லை என கடந்த காலங்களில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தற்போது நாட்டில் பொருளாதார பிரச்சினைகளுடன் இதனை அபிவிருத்தி செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியை அரச தனியார் பங்களிப்பின் கீழ் அபிவிருத்தி செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இதற்காக முதலீட்டாளர்களை முன்வருமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை அழைப்பு விடுத்திருந்தது. அதற்கமையவே மிதக்கும் சந்தை வளாகம் ஜப்பானிய நகரமாகவும் மிதக்கும் சந்தையாகவும் உருவாக்கப்படவுள்ளது. இது ஜப்பானிய முதலீட்டாளருக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படும். வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலக்குவைத்து புறக்கோட்டை மிதக்கும் சந்தை வளாகத்தை சுற்றுலா நகரமாக நிறுவுவதே இதன் நோக்கமாகும். அதன் அபிவிருத்தித் திட்ட காலம் 6 மாதங்களாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply