சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து: மதகுரு உட்பட நால்வர் காயம்

அவுஸ்ரேலியா சிட்னியில் உள்ள தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்தனர் என அவுஸ்ரேலியக் காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் திங்கட்கிழமை மாலை சிட்னிக்கு மேற்கே சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள வேக்லியின் புறநகர் பகுதியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் நடந்தது.


தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையின் போது இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேவாலயத்தின் பலிபீடத்தில் ஒரு மதகுருவை அணுகி நபர் மதகுருவை கத்தியால் குத்துவதைக் காணொளி காட்டுகிறது. இந்த தாக்குதலில் தேவாலயத்தின் பிஷப் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

கத்தியால் குத்திய 15 வயதுடை நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 15 வயது சந்தேக நபரின் கையில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நியூ சவுத் வேல்ஸ் உதவி ஆணையர் ஆண்ட்ரூ ஹாலண்ட் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட நான்கு பேரும் 20 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்று ஆம்புலன்ஸ் சேவையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளனர். 50 வயதான ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றைய மூவருக்கும் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

தேவாலயத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் கூடி, போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதால் இந்த சம்பவம் அமைதியின்மையை ஏற்படுத்தியது. அவர்களில் இருவர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவரை வெளியில் கொண்டு வருமாறு திரண்டிருந்த மக்கள் கோரிக்கை விடுத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு சிட்னியில் உள்ள போண்டி சந்திப்பில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் 40 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் நடந்த சில நாட்களில் மீண்டும் இந்த கத்திக்குத்து நடத்தப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply