நாளொன்றுக்கு 20 ஆயிரம் ரூபா சம்பாதிக்கும் யாசகர்கள்: பணம் வழங்குவதை தவிர்க்குமாறு பொலிஸார் வலியுறுத்தல்

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சந்திகள் மற்றும் சமிக்ஞை விளக்கு அமைந்துள்ள பகுதியில் யாசகம் பெறுவோருக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாசகர்களுக்கு பணம் வழங்குவதால் போக்குவரத்து நெரிசல், வாகங்களுக்கு சேதம், வீதி விபத்துகள் ஊடாக யாசகர்கள் காயமடையும் நிலை காணப்படுவதாக போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சந்திகள் மற்றும் சமிக்ஞை விளக்கு அமைந்துள்ள பகுதியில் யாசகம் பெறுவோரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸார் குறித்தப் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திக தெரிவித்துள்ளார்.

பிரதான இடங்களில் யாசகம் பெறுவோரை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என தெரிவித்த அவர், வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் பணம் வழங்குவதை தவிர்க்கும் நிலையில், யாசகர்களை ஒழிக்க முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நளொன்றுக்கு 2500 முதல் 3000 ரூபா வரை வருமானம் ஈட்டக்கூடிய தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்ட போதிலும், அதனை நிராகரித்த யாசகர்கள் நாளொன்றுக்கு 15,000 முதல் 20,000 வரை வருமானம் ஈட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் 94 யாசகர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை நீண்ட நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க முடியாததன் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான யாசகர்கள் போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையாகியுள்ள நிலையில், யாசகம் பெறுவதனை முழுநேர தொழிலாக சிரல் ஈடுபட்டு வருவதாகவும், அவ்வாறான நபர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply