அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த பெண் கிராம அதிகாரி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான கிராம அதிகாரி பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

கிராம அதிகாரியைத் தாக்கிய நபருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி கிடைக்கப்பெறவில்லை எனவும் அதன் பின்னரே இருவருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிராம அதிகாரியைத் தாக்கிய நபர் வஸ்கடுவ பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் இவர் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply