காலியில் துப்பாக்கிச் சூடு மூன்று பேர் பலி

காலி ஹினிதும பனங்கல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதோடு, மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை.சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை ஹினிதும பொலிஸார் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply