இலங்கையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 816,191 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.


ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில், 93,915 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன் அதன் எண்ணிக்கை 18,220 ஆகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply