நம்பினால் நம்புங்க காத்தான்குடி நகரை ‘சிங்கப்பூர், மலேசியாவைவிட அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்றுவோம். : மு.க முதன்மை வேட்பாளர் அஸ்பர்

2050ம் ஆண்டில் காத்தான்குடி நகரை ‘சிங்கப்பூர், மலேசியாவைவிட அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்றுவோம்..! முன்னாள் நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர்

நாம் ஏற்கனவே காத்தான்குடி நகரத்துக்கான ஒரு கிரீன் சிட்டி மாஸ்டர் பிளான் போட்டுள்ளோம் , அந்த மாஸ்டர் பிளானில் சகலதும் உள்வாங்கப் பட்டிருக்கும் .

2030ம் ஆண்டு காத்தான்குடி நகரம் எப்படி இருக்கனும், 2050ம் ஆண்டு காத்தான்குடி நகரம் எப்படி இருக்கனும் என மாஸ்டர் பிளான்ல இருக்கு.

2050ம் ஆண்டு ஆகும் போது உலகமே காணாத ஒரு நகரமாக இந்த நகரம் இருக்கும். சிங்கப்பூர் மலேசியா போல் அல்ல அதை விடவும் அபிவிருத்தி அடைந்திருக்கும். அப்படியான ஒரு சிட்டி பிளானை தான் நாம் செய்துள்ளோம்.

இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இந்த நகரத்தை கட்டி எழுப்புவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply