இத்தாலிக்கு பயணமானார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று புதன்கிழமை (23) காலை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவே கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை 09.30 மணியளவில் அபிதாபி சென்று பின்னர் அங்கிருந்து மற்றுமொரு விமானம் ஊடாக இத்தாலிக்கு செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply