செம்மணியில் ஏற்றப்பட்ட அணையா தீபம் தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது

செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக அணையா தீபமாக எரிந்து கொண்டிருந்த தீபம் நேற்றைய தினம் புதன்கிழமை தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது. செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு , யாழ் , வளைவுக்கு அருகில் அணையா தீபம் ஏற்றப்பட்டு , தொடர்ச்சியாக மூன்று நாட்களாக தீபம் அணையாது போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மூன்றாம் நாளான நேற்றைய தினம் புதன்கிழமை மாலையுடன் போராட்டம் நிறைவு பெற்றதனை அடுத்து , அணையா தீபம் தொண்டமனாற்று பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு ,கடல் நீரில் விடப்பட்டது

மூன்றாம் நாள் போராட்டமான நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நேரில் வருகை தந்து , அணையா தீபம் முன் நின்று வணங்கி மலரஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply