போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்காக 03 புதிய மத்திய நிலையங்கள்
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்காக 03 புதிய மத்திய நிலையங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் அந்த மத்திய நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார்.
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து செல்வதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண்பதற்காக நாடுமுழுவதும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இளைஞர்கள் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு ஆளாகாமல் தடுக்க விழிப்புணர்வு திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply