பராட்டே சட்டத்தை செயற்படுத்தினால் தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் : நாமல் ராஜபக்ஷ

பூகோள பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் பராட்டே சட்டத்தையும், வங்கி கடன்கள் மீளறவிடலையும் நாளை முதல் செயற்படுத்தினால் சிறு மற்று நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் தொழில் முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்படும், ஆகவே சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை கடன் பெற்றுள்ள சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களிடமிருந்து வங்கிகளால் கடனை மீள அறவிடல் அல்லது பராட்டே சட்டத்தை செயற்படுத்தல் ஜுலை 01 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமுலுக்கு வரவுள்ளது.

இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பலர் பாதிக்கப்படுவதுடன், அவர்களின் தொழில்நடவடிக்கைகளும் பாதிக்ககூடும்.

பொருளாதார உலகில் தற்போதைய ஸ்தீரமற்ற நிலைமையை கருத்திற்கொண்டு சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்விடயம் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.

பூகோள பொருளாதார நெருக்கடியினால் இலங்கையின் ஏற்றுமதி சந்தை தற்போது மந்தகதியான நிலையில் உள்ளது.வர்த்தக நடவடிக்கையில் அரசாங்கத்திடமிருந்து ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதை தவிர சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு மாற்று தீர்வு ஏதும் கிடையாது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் குறித்து அரசாங்கம் பொறுப்புடன் கவனம் செலுத்தாவிடின் இந்த தொழிற்றுறை வீழ்ச்சி பலரது வாழ்க்கையை அச்சுறுத்லுக்குள்ளாக்கும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply