அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்

ரஷ்ய அதிபர் புடின் வரும் வாரம் சீனாவுக்கு 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். 3 நாள் அரசு முறை பயணமாக கடந்த 13ம் தேதி சீனா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை சந்தித்து பேசினார். அப்போது ஈரான் போர், இருநாட்டு வர்த்தக உறவு, சர்வதேச அரசியல் சூழல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். சீன பயணத்தை முடித்து கொண்டு நேற்று முன்தினம் டிரம்ப் அமெரிக்கா திரும்பினார்.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வரும் 19,20 ஆகிய தேதிகளில் சீனாவுக்கு 2 நாள் அரசு முறை பயணம் செல்ல உள்ளார். இதுகுறித்து கிரெம்ளின் மாளிகை நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “2001ம் ஆண்டு கையெழுத்தான ரஷ்யா, சீனா நட்புறவு ஒப்பந்தத்தின் 25வது ஆண்டு நிறைவையொட்டி மே 19,20 ஆகிய தேதிகளில் புடின் சீனா செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின்போது, இருதரப்பு உறவுகள், சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply