கேரள முதல்வராக வி.டி.சதீசன் இன்று பதவி ஏற்கிறார்: 21 அமைச்சர்கள் அடங்கிய பட்டியலை கவர்னரிடம் வழங்கினார்

கேரளத்தில் வி.டி. சதீசன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று பதவி ஏற்கிறது. 21 அமைச்சர்கள் அடங்கிய பட்டியலை நேற்று அவர் கவர்னரிடம் வழங்கினார். கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த இடதுசாரி கூட்டணிக்கு இம்முறை 35 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.

பாஜ முதன் முதலாக 3 தொகுதிகளை கைப்பற்றியது. இதற்கிடையே முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளரும், எம்பியுமான கே.சி. வேணுகோபால், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் வி.டி. சதீசன் ஆகியோர் போட்டி போட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply