அமெரிக்காவில் கொள்ளையை தடுக்க முயன்ற இந்திய வம்சாவளிப்பெண் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளி பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அப்பகுதியைச் சுற்றி வளைத்து, விசாரணையைத் தொடங்கினர்.
கொல்லப்பட்ட பெண் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மேக்னாபென் படேல்(47) என அடையாளம் காணப்பட்டார். இவர் கடந்த பத்து வருடமாக அந்த பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்துள்ளார். பல்பொருள் அங்காடியில் கொள்ளை முயற்சியை தடுக்கும் போது இந்திய பெண் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்த அவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அவரது சொந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 26 வினாடிகளுக்குள் அரங்கேறிய இந்தச் சம்பவம் முழுவதுமே, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply