ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பணிந்தாரா? சோனியா, ராகுலுடன் விஜய் சந்திப்பு தவிர்ப்பு: டெல்லியில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்
காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரது சந்திப்பை ரத்து செய்து விட்டு அவசர அவசரமாக முதல்வர் விஜய் டெல்லியிலிருந்து சென்னை திரும்பியது காங்கிரசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு மிரட்டல் விடுத்ததே இந்த சந்திப்பு ரத்தானதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்து முதல்வராக விஜய் பதவி ஏற்றார்.
தனிப்பெரும்பான்மைக்கான கிடைக்காததால் திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இதனால் மைனாரிட்டி அரசாக தமிழகத்தில் தவெக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெக குதிரை வேகத்தில் குதிரை பேர அரசியலில் ஈடுபடுகிறது என்று எதிர்க்கட்சிகளால் கடும் கண்டனத்துக்குள்ளானது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், விஜய் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் டெல்லி சென்ற விஜய் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். மொத்தம் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. அப்போது முதல்வர் விஜய், பிரதமர் மோடியிடம் சில கோரிக்கைகளையும் அளித்துள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்னை, தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.



Leave a Reply