ரயில் தண்டவாளம் தகர்ப்பு ; தமிழகத்தில் புலி ஆதரவாளர்கள் கைவரிசை: 2 ஆயிரம் பேர் உயிர் தப்பினர்

விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. முன்கூட்டியே தகவல் கிடைத்ததால் சென்னை சென்ற ரயில் தப்பியது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் வருகைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புலி ஆதரவு அமைப்புகள் இந்த சதி வேலையை நடத்தியிருக்கின்றனர். மேற்குவங்கத்தில் மாவோ., நக்சல்கள் ரயிலை தகர்த்து நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய சம்பவம் போல் , தமிழகத்தில் நடந்திருக்க வேண்டிய பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது.

நேற்று நள்ளிரவில் விழுப்புரம் அருகே நடந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு: திருச்சியில் இருந்து சென்னை நோக்கி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவில் 2. 57 மணி அளவில் விழுப்புரம் விக்கிரவாண்டி சித்தனி அருகே தண்வாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ன. இதன் சப்தம் கேட்டதும் பேரணி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ரயில்வே டிரைவருக்கு தகவல் கொடுத்தார். வேகமாக வந்த ரயிலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக தகவல் கிடைக்காவிட்டால் தேச விரோத கும்பலின் ரயில் கவிழ்ப்பு சம்பவம் அரங்கேறியிருக்கும். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்க நேரிட்டிருக்கும் என அங்கு முகாமிட்டிருக்கும் நமது தினமலர் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

நாசவேலையில் ஈடுபட்டது யார்?  தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டதில் 4 அடி அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் போலீசார் ஒரு துண்டு பிரசுரத்தை எடுத்துள்ளனர். அதில் பிரபாரனின் தம்பிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சமீபத்திய இந்திய வருகைக்கு கண்டனம் தெரிவித்து இந்த நாச வேலை நடந்திருப்பதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம் நக்சல்கள் நடத்திய சம்பவம் போல் இந்த சதி திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.

பல ரயில்கள் பாதியிலே நிறுத்தம் விழுப்புரம் அருகே நடந்த இந்த சம்பவத்தினால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தண்டவாளம் சீரமைக்கப்பட்டு ரயில்கள் அனுப்பி வைக்கப்படும் என ரயில்வே செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply