டக்ளஸ் தேவானந்தாவிற்கு நல்லூர் பல்நோக்கு கூட்டுறவு சமூகத்தினரால் வரவேற்பு விழா
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நல்லூர் பல்நோக்கு கூட்டுறவு சமூகத்தினரால் நேற்று வரவேற்பு விழா நடாத்தப்பட்டது. நல்லூர் பிரதேச செயலாளரும் நல்லூர் பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவருமான செந்தில்நந்தனன் தலைமையில் நல்லூர் பல நோக்கு கூட்டுறவு சங்க தலைமைப்பணிமனையில் நேற்று மதியம் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு சிறப்புரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தற்சமயம் சிறப்பாக செயற்பட்டுவரும் நல்லூர் கூட்டுறவு சமூகத்தினருக்கு தமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொண்டார்.
மேலும் கூட்டுறவாளர்கள் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய அமைச்சரவர்கள் சமூக பிரச்சினைகளிலும் தமது கருத்துக்களை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். முன்னர் வாய்மூடி மௌனமாக இருந்தபடியினால் தான் பெருமளவு அழிவுகளும் இடப்பெயர்வுகளும் ஏற்பட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் மேற்கொண்ட சரியான நடவடிக்கைகள் மூலம் தற்சமயம் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருப்பதை பாதுகாத்துக் கொண்டு மேலும் முன்னேற வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வின் நிறைவாக நல்லூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினால் கையளிக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான மகஜரைப் பெற்றுக்கொண்ட அமைச்சரவர்கள் அக்கோரிக்கைகள் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன் இலகு கடன் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply