அமெரிக்க, பிரித்தானிய விமானங்கள் லிபியா மீது தாக்குதல் நடத்துகின்றன

அமெரிக்க, பிரித்தானிய விமானங்கள் லிபிய நிலைகள் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லிபிய ஜனாதிபதி முஹம்மர் கடாபின் துருப்பினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் 110 ஏவுகணைகளை லிபிய நிலைகள் மீது தாக்கியதாக பென்டன் அறிவித்துள்ளது. மேலும் பிரெஞ்சு விமானங்கள் லிபிய மீது விமானத் தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, லிபியாவை பாதுகாப்பதற்காக போராடப் போவதாக அந்நாட்டு ஜனாதிபதி கடாபி அறிவித்துள்ளார். ஆயுதக் கிடங்குகள் திறந்து விடப்படும் எனவும் நாட்டை பாதுகாக்க மக்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மிஷ்ராடா மற்றும் தலைநகர் ட்ரைப்போலி ஆகிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லிபிய துருப்பினரின் பல வாகனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. பிரித்தானிய விமானங்கள் லிபியாவில் தாக்குதல்களை நடத்தி வருவதாக பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்துள்ளார். அமெரிக்கா வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அந்நாட்டு ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்

எந்தவிதமான தயவுமின்றி லிபிய மக்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதனை வேடிக்கை பார்க்க முடியாது எனவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், அமெரிக்கத் துருப்பினர் தரைவழித் தாக்குதல்களை நடத்தப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

லிபிய மக்கள் சுதந்திரத்திற்காக போராடுவார்கள் என கடாபி அறிவித்துள்ளார். பிரித்தானியா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply