எனக்குப் பதிலளிக்க எவரும் இங்கு ஜனாதிபதியுமல்ல பிரதமருமல்ல ! : சபையில் ரணில்

சபையில் எனக்குப் பிரதமர் பதிலளிக்க முடியும். எனக்குப் பதிலளிப்பதற்கு இங்கிருக்கும் ஒவ்வொருவரும் ஜனாதிபதியுமல்ல, பிரதமருமல்ல என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது எழுந்த சர்ச்சையின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது ஐ.தே.க. எம்.பியான ரவி கருணாநாயக்க 2009 ஆம் ஆண்டுக்கும் பின்பு ஏ9 வீதியின் புனர்நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்ட திகதி கருத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்ட திகதி உள்ளிட்ட கேள்விகளை துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரிடம் கேட்டிருந்தார்.

கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு எழுந்து துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் நிர்மல் கொத்தலாவல,

“இக்கேள்விக்குப் பதிலளிப்பதற்கு நான் தயார். அதனை ஆற்றுப்படுத்துவேன். எனினும் வடக்குக்கு அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் நாட்டை உலகுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டார்” என்று குற்றஞ்சாட்டினார்.

இதனிடையே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க,

” எனக்கு இந்தச் சபையில் பிரதமர் பதிலளிக்கலாம். ஒவ்வொருவரும் ஜனாதிபதி அல்ல பிரதமரும் அல்ல…” என்று கூறினார்.

இதன்போது ஒழுங்கு பிரச்சினை எழுப்பிய ஆளும் கட்சி எம்.பியான ஏ.எச்.எம். அஸ்வர்,

“எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அக்கூற்றை அவர் விலக்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.

இதனிடையே கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ,

“கேட்ட கேள்விகளுக்கு, அநாவசியமான வசனங்களைப் பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு பயன்படுத்தினால் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply