அபிவிருத்தித் திட்டங்களின்போது எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் : ஜனாதிபதி

அபிவிருத்தித் திட்டங்களின் போது எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அபிவிருத்தித் திட்டங்களில் எதிர்க்கட்சிகளின் யோசனைகள் உள்ளடக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சரியான திட்டமிடல் மற்றும் மேற்பார்வையின் மூலம் காத்திரமான முறையில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply