இலங்கையில் ஆசிரியர் மேம்பாட்டு மையம் அமைக்க யுனெஸ்கோ தீர்மானம்

ஆசிரியர்களின் செயற்பாடுகளை மேம்படுத்த தெற்காசியாவில் ஆசிரியர் மேம்பாட்டு மையம் ஒன்றை அமைக்க ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு இலங்கையை தெரிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அமைச்சர் பந்துல, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

இலங்கையிலும் தெற்காசியாவிலும் கல்வியின் தரத்தை உயர்த்த இந்த ஆசிரியர் மேம்பாட்டு மையம் பெரிதும் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மையத்தின் ஊடாக ஆசிரியர் துறையில் ஆசிரியர் கல்வி / ஆலோசகர்கள் / பள்ளி சார்ந்த ஆசிரியர்கள் வளர்ச்சிக்கு பங்களிப்பை பெற்றுக் கொள்ள முடியும் என மேலும் எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply