கிளிநொச்சி மாவட்டத்தில் ஜந்து ஆண் பிள்ளைகள் காணாவில்லை!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜந்து ஆண் பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக அவர்களின் பெற்றோர்கள் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழவில் நேற்றுப் புதன்கிழமை முறையிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.கிளிநொச்சியில் நடமாடும் மனித உரிமைகள் அலுவலகத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் சந்திப்பு பிரதி புதன்கிழமைகளில் நடைபெறுகின்றது.

இந்த சந்திப்பில் 12 முறைப்பாடுகள் அன்றைய தினம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதில் ஜந்து முறைப்பாடுகள் கடந்த 2009 ஆம் ஆண்டில் யுத்தம் நடைபற்ற காலப்பகுதியில் காணாமல் போயுள்ளவர்கள் பற்றியதாகும்.

இவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்கள் பிள்ளைகள் இருக்கின்றார்களா ? இல்லையா ? என யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் சொல்ல வேண்டும் என உருக்கமான முறையில் முறையிட்டுள்ளதாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply