பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டம் நிறைவு
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டத்தினை நாளை வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வர பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது என சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் மஹின் மென்டிஸ் தெரிவித்தார். எனினும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகளிற்கு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ள்ள தீர்வுகள் திருப்தியளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
‘எவ்வாறாயினும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தினை தற்காலிகமாக முடிவுக்கொண்டு வருகின்றோம். ஆனால் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றதா என்பதை அவதானித்துக் கொண்டிருப்போம்’ என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் ஊடக பேச்சாளர் மஹின் மென்டிஸ் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply