இலங்கை அரசியலமைப்பில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும்

பிரித்தானிய தமிழ் கன்சவேட்டிவ் அமைப்பு பிரித்தானிய கன்வவேட்டிவ் கட்சியுடன் உத்தியோக பூர்வமாக இணைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய கன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற தெளிவான சிந்தனையை தாம் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானிய தமிழ் கன்சவேட்டிவ் அமைப்பின் உதவி தலைவர் அர்ஜூன் சிவநாதன் கருத்து தெரிவிக்கையில் பிரித்தானியாவின் அடுத்த நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கொண்டிருக்கும் என குறிப்பிட்டார்.

இந்தநிலையில், கன்சவேட்டிவ் கட்சி இலங்கை தமிழர்களின் நலன் கருதி செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போது இலங்கையின் அரசியலமைப்பில் சிறிய மாற்றத்தையாவது அந்த நாட்டின் அரசாங்கம் செய்யாது போனால் தற்போதைய நிலைமை மோசமாகும் என்று எச்சரித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply