தூக்கு தண்டனையை குறைப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது

நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மற்றும் ஆயுட் தண்டனை வழங்கப்பட்ட கைதிகளின் தண்டனையை குறைப்பது தொடர்பில் நீதி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.  இது தொடர்பில் அறிக்கையொன்றை தயாரித்து ஜனாதிபதிக்கு வழங்க உள்ள தோடு ஜனாதிபதியே இவர்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

மரணதண்டனை மற்றும் ஆயுட் தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 200 கைதிகள் 2002 ஆம் ஆண்டு முதல் சிறைக ளில் உள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஐ.தே. க. எம். பி. தயாசிரி ஜயசேகர கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த அவர், மேற்படி கைதிகள் தொடர்பில் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு எமக்கு அறிக்கையொன்றை கையளித்துள்ளது. அது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என்றார்.

இதே விடயம் தொடர்பில் தயாசிரி ஜயசேகர எம்.பி. சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரிடமும் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் சந்திரசிரி கஜதீர, மரண தண்டனை கைதிகளினதும் ஆயுட் தண்டனை கைதிகளினதும் தண்டனைக் காலத்தை குறைப்பது தொடர்பில் எமது அமைச்சு அறிக்கை தயாரித்துள்ளது. நீதி அமைச்சே இதற்கு பொறுப்பாக உள்ளது.

அதனால் குறித்த அறிக்கை நீதி அமைச்சிற்கு வழங்கியுள்ளோம். நீதித்துறையைத் பாதுகாக்க அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது எனவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply