சமல் ராஜபக்ஷவை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளுக்கு அனுமதி
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது என அச்சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி சஞ்ஜய கமகே தெரிவித்தார். இதன் பிரகாரம், எதிர்வரும் 21ஆம் திகதி, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் இதில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு மற்றும் சிரேஷ்ஷ சட்டத்தரணிகள் பலரும் கலந்துகொள்வர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply