பிலிப்பைன்ஸ் சூறாவளியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்வு

தென் பிலிப்பைன்ஸில் வீசுகின்ற கடுமையான சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் இந்த சூறாவளி காரணமாக பலர் இடம்பெயர்ந்துள்ளனர். ‘போபா’ எனப் பெயரிடப்பட்ட இந்த சூறாவளி மின்டானோ பகுதியை தாக்கியபோது, கொம்பொஸ்ரலா பள்ளத்தாக்கு மாகாணத்தில் மாத்திரம்  குறைந்தது 156 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மீட்புப் பணியாளர்கள் அந்தப் பகுதிகளைச் சென்றடைந்துள்ளனர். ஆயினும் தனியான இடங்களில் வாழ்கின்ற சமுதாயத்தினரை எட்டுவதில் கஷ்டங்கள் உள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த சூறாவளி தென் சீனாவின் கடலுக்கு  இன்று வியாழக்கிழமை நகர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply