அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது உகந்தது!

நாடாளுமன்றத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கின்ற குழுநிலை விவாதத்தின் போது அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் அவையில் பிரசன்னமாய் இருக்காது விட்டால் சபையை ஒத்திவைப்பதே உகந்ததாகும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தின் போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க உரையாற்றினார்.

அப்போது, அவையில் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சரோ, பிரதியமைச்சரோ இருக்கவில்லை. அத்துடன் அமைச்சர்கள், பிரதியமைச்சர்களின் ஆசனங்களும் வெறிச்சோடி இருந்தன.

ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இவை தொடர்பில் சுட்டிக்காட்டிய போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply