ஜனாதிபதி மஹிந்தவின் மலேசிய விஜயம் இரத்தானமைக்கு அழுத்தங்கள் எதுவும் காரணமில்லை
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மலேசிய விஜயம் அரசியல் அழுத்தம் காரணமாக இரத்து செய்யப்படவில்லை என கோலாலம்பூரில் உள்ள மலேசிய தூதரகம் உறுதி செய்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மலேசிய விஜயத்தை கண்டித்து மலேசிய அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இலங்கை ஜனாதிபதி மலேசியா வந்தால் எதிர்ப்பு வலுப்பெறும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர் குற்றம் புரிந்ததாக அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில் மலேசியா செல்லவிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதென அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு காரணம் அரசில் அழுத்தங்கள் என பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மலேசிய தூதரகம் அதனை மறுத்துள்ளது.
மலேசியாவில் இன்று (06) நடைபெறவுள்ள உலக முஸ்லிம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரத்து செய்தமைக்கு காரணம் பிரதமர் டி.எம்.ஜயரத்னவை பார்வையிட அமெரிக்கா செல்வது என மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யு.தவுலகல தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply