தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது
பிரதம நீதியரசர் மீதான அரசியல் குற்றப்பிரேரணையை விசாரிக்கும் விசேட பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்று 7 ஆம் திகதி பிற்பக ல் 1.30 மணிக்கும் மீண்டும் கூடவுள்ளது. அத்துடன் இத்தெரிவுக்குழு நாளை 8 ஆம் திகதியும் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்குச் சவாலாக பிரதம நீதியரசர் தெரிவுக் குழுவிலிருந்து வெளியேறிச் சென்றது தொடர்பில் இன்று கூடுகின்றபோது முடிவு எடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை விசாரிக்கின்ற விசேட தெரிவுக் குழு நேற்று 6 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியதுடன் அதில் பிரதம நீதியரசரும் சட்டத்தரணிகளும் கலந்துகொண்டனர்.
இந்த தெரிவுக் குழு நேற்று மாலை 6.30 மணி வரை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தது. எனினும் பிரதம நீதியரசரும் சட்டத் தரணிகளும் தெரிவுக் குழுவிலிருந்து எழுந்து பிற்பகல் 5.30 மணியளவில் வெளியேறிச் சென்றுள்ளனர்.
விசேட தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளில் தமக்கு நம்பிக்கை இல்லையென்றும் பிரதம நீதியரசரின் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா கூறினார்.
சாட்சியாளர்களின் பெயர்ப் பட்டியலைச் சமர்ப்பிக்காமை, குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்காமை ஆகிய காரணங்களால் பிரதம நீதியரசருக்கு தெரிவுக் குழு தொடர்பில் நம்பிக்கையில்லையெனக் கூறிக் கொண்டு சட்டத்தரணிகளுடன் வெளியேறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply