குற்றப்பிரேரணையில் உரிய ஒழுங்குமுறைமையை கடைபிடிக்கப்பட வேண்டும்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதாக குற்றப்பிரேரணை விசாரணையில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய ஒழுங்குமுறைமையை கடைபிடிக்கப்பட வேண்டும் என இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  இலங்கையின் நீதித்துறையின் தற்போதைய நிலைமை மற்றும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை கையாளப்படுகின்ற முறைமை தொடர்பாக அமெரிக்கத்தூதரகம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது.

எந்தவொரு விசாரணையும் வெளிப்படைத்தன்மையுடனும், உரிய ஒழுங்குமுறைக்கு உத்தரவாதமளிப்பதாகவும், சட்டத்தின் ஆட்சிமுறைமைக்கு இணங்கியதாகவும் முன்னெடுக்கப்படவேண்டும் என இலங்கை அரசாங்கம் மற்றும் பிரதம நீதியரசருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்கின்ற பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடமும் நாம் வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply