மாணவர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  கடந்த சில நாட்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

காலம் கடந்த தீர்மானங்களை எடுக்காமல் உரிய நேரத்தில் சரியான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமைகளுக்கு அரசாங்கம் உடனடித் தீர்வை வழங்க வேண்டுமென ருவான் விஜேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply