15 வயது பூர்த்தியாகிய ஒவ்வொருவரும் தேசிய அடையாள அட்டை

15 வயது பூர்த்தியாகிய ஒவ்வொருவரும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் விதத்தில் ஆட்பதிவு திணைக்கள சட் டத்தில் திருத்தங்கள் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள் ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் பதில் ஆணையாளரும், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளருமான ஜீ.ஏ. ரஞ்சித் தெரிவித்தார். தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் தற்போது காணப்படும் 16 வயது என்ற எல்லையை மாற்றி 15 வயது பூர்த்தியானதுமே அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

16 வயது பூர்த்தியானதும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். இப்போதைய நடைமுறையின்படி க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெரும் பிரச்சி னைக்கு உள்ளாகின்றனர். சிலருக்கு பரீட்சை திகதிக்கு இரண்டு அல்லது ஒரு நாள் முன்னரேயே 16 வயது பூர்த்தியாகிறது. 16 வயது பூர்த்தியாகும் வரை அவருக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. இதனால் ஆட்பதிவு திணைக்களமும் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகிறது.

சில பாடசாலைகளின் அதிபர்கள் விண்ணப்பங்களை இறுதி நேரத்திலேயே அனுப்பிவைக்கின்றனர். அடையாள அட்டைகள் தயாரித்தல் நடவடிக்கை இன்னமும் மனித வளத்தைக் கொண்டே எழுதப்படுகின்றன. இதேவேளை, 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டம் 71 ஆம் ஆண்டு 28 ஆம், 37 ஆம் இலக்கங்களில் திருத்தங்கள் கொண்டுவரப் பட்டன. அதன் பின்னர் ஆட்பதிவு திணைக்களச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை என ஆட்பதிவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply