இலங்கை கடல் வழியாக இந்தியாவிற்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல்
பாகிஸ்தான் பயங்கரவாதிகள், கடல் வழியாக கேரள மாநிலத்தில், ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம், கேரள மாநில அரசை உஷார்படுத்தியுள்ளது. அதனால், கேரள கடற்கரை கிராமங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன், இலங்கை கடல் பகுதியில் தனியாக ஒரு மர்ம படகு நின்றிருந்தது; அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மர்ம படகை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அந்த படகில் ஆறு பேர் இருந்தனர். அவர்களிடம், இலங்கை படையினர் விசாரணை நடத்தியபோது, அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் என்றும், இந்தியாவிற்குள், கேரள மாநில கடல் வழியாக ஊடுருவ வந்ததாகவும் தெரிவித்தனர்.தங்களைப்போல், மற்றொரு கும்பலும் வந்திருப்பதாகவும் கூறினர். இதையடுத்து, பாக்., பயங்கரவாதிகளை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும், இந்தியாவிற்குள், பாக்., பயங்கரவாதிகள், கேரள கடல் பகுதி வழியாக ஊடுருவ திட்டமிட்டுள்ளது குறித்தும், இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, மத்திய உள்துறை, கேரள அரசை உஷார் படுத்தியுள்ளது.இதனால், கேரள மாநிலம் கொல்லம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய கடல் பகுதிகள் முழுவதும், கேரள போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை கிராமங்களில் மர்ம நபர்கள் சுற்றி திரிகிறார்களா என, கண்காணித்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply