வானில் தென்படும் மர்மப்பொருள் குறித்து ஆய்வு செய்யவதற்கு தீர்மானம்

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களில் வானில் தென்படும் மர்மப்பொருள், பிரகாஷம் குறித்து ஆய்வு செய்ய வைத்திய பரிசோதனை நிறுவனம் தீர்மானித்துள்ளது. கடந்த சில நாட்களாக வானில் மர்மப்பொருள் தென்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அவ்வாறான வான் மர்மங்களை கண்டால் உடனடியாக வைத்திய பரிசோதனை நிலையத்திற்கு அறியத்தருமாறு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் கண்களுக்கு இரவு வேளைகளில் தென்படும் பிரகாசமான ஒளிர்வு வியாழன் கிரகத்தினுடையது என்று ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் விஞ்ஞான ஆராய்ச்சியாளர் சிராஜ் குணசேகர தெரிவித்துள்ளார்.

சிலாபம், இரணவில, தனமல்வில, பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் தென்பட்ட ஒளிர்வு தொடர்பான ஒளிநாடா காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த ஒளிர்வு வியாழன் கிரகத்தினுடையது என்ற முடிவுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில் வியாழன் கிரகம் மிகவும் பிரகாச ஒளிர்வாக இருக்கின்றது. அதன் காரணமாகவே அதன் ஒளிர்வை எம்மால் பார்க்க முடிகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை சர்வதேச வானிலையாளர்கள் தற்போது வியாழன் கிரகம் பூமிக்கு மிக அருகில் வந்துள்ளது. கடந்த 2ம் திகதி பூமிக்கும், வியாழன் கிரகத்திற்குமிடையிலான தூரம் 609 மில்லியன் கிலோ மீற்றர்களாக இருந்தது.

இதுவே மிக அண்மித்த தூரம். இக்கிரகம் இதன் பின்னர் 2021 ஆம் ஆண்டிலேயே இவ்வாறு நெருங்கி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒளிரும் விண்கற்களை இன்று 14ம் திகதி இரவு வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என்று விண்ணியல் ஆய்வாளரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் துறைப் பேராசிரியருமான சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 04ம் திகதி முதல் 17ம் திகதி வரையும் இலங்கையர் விண்கற்களைப் பார்க்கலாம் எனவும் 13ம், 14ம் திகதிகளில் வெற்றுக் கண்களால் தெளிவாகப் பார்க்க முடியுமென்றும் அவர் கூறினார்.

விண்கற்கள் செறிவாக இருக்கும் அண்டவெளி பாதையில் புவி பயணம் செய்கின்றமையே இவ்வாறு விண்கற்களை வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடியதாக இருக்கின்றமைக்கு காரணம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply