வவுனியா நகர மத்தியில் தமிழ்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, வவுனியா நகர மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி வருகின்றன. 8 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்படி கட்சிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றியுள்ளனர்.

தமிழ்த்  தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜாஇ செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆனந்த சங்கரி ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை, வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இனவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்துதல், பல்கலைக்கழகங்களுக்குள் நிலவும் கலாசார மற்றும் கல்வி சீரழிப்புக்களை நிறுத்துதல், கைதுகளை நிறுத்துதல், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோரைக் கண்டறிதல், மாணவர்களை சிறையிலடைக்க வேண்டாம், காணி அபகரிப்புக்களை நிறுத்துதல், மீள்குடியேறிய மக்களை சுதந்திரமாக செயற்பட விடுதல் போன்ற 8 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply