மற்றுமொரு போராட்டத்திற்கான மனநிலையை ஏற்படுத்த முயற்சி
வடக்கில் கடந்த வாரம் மாத்திரம் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாதுகாப்பு தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் கைது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
எவ்வித விசாரணைகளும் இன்றி, பாதுகாப்பு தரப்பினரால், வடக்கில் வாழும் இளைஞர்கள் கைதுசெய்யப்படுவது மிகவும் தவறானது என்பதுடன் ஜனநாயக விரோத செயற்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரத்தில் மாத்திரம் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மூன்று பேர் அடங்குகின்றனர். கைதுசெய்யப்பட்ட பின்னர், குடும்பங்களுக்கு அது தொடர்பாக அறிவிக்கப்படுவதில்லை.
போர் முடிவடைந்து நான்கு வருடங்கள் கழிந்துள்ளன. எனினும் வடக்கில் பயங்கரவாத செயல்கள் நடைபெற்றதாக தகவல்கள் இல்லை. இவ்வாறான சூழ்நிலையில், வடக்கில் இளைஞர், யுவதிகள் கைதுசெய்யப்படுவது, அவர்கள் வதைகளுக்கு உட்படுத்தப்படுவதன் மூலம் அவர்களை மற்றுமொரு போராட்டத்திற்கான மனநிலையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்றே நாங்கள் காண்கிறோம்.
இதன் ஆபத்தான நிலைமையை அரசாங்கம் உணர வேண்டும். கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து இளைஞர், யுவதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply