சுயாதீன ஆணைக்குழுவின் ஊடாக பிரதம நீதியரசருக்கு நன்மை கிடைக்கக்கூடும்
வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவே சுயாதீன ஆணைக்குழு நிறுவப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரணை செய்த பாராளுமன்ற உறுப்பினர் குழுவிற்கு சவால் விடுக்கும் வகையில் ஜனாதிபதி சுயாதீன ஆணைக்குழுவொன்றை நிறுவியுள்ளதாகவும் சர்வதேச அழுத்தம் காரணமாக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சுயாதீன ஆணைக்குழுவின் ஊடாக சில வேளைகளில் பிரதம நீதியரசருக்கு நன்மை கிடைக்கக்கூடும் என தெரிவித்த சரத் பொன்சேகா, அரசியல் அழுத்தங்கள் காரணமாக நீதிமன்றக் கட்டமைப்பின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் ஜனநாயகம் நிலைபெற வேண்டுமாயின் நிறைவேற்று, நீதிமன்ற மற்றும் பாராளுமன்ற அதிகாரங்கள் சமநிலையாக பேணப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply