இரண்டு வருடங்களுக்கான உணவு திட்டத்திற்கு உலக உணவு திட்டம் நிதியுதவி

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் இலங்கைக்கு 10 லட்சத்து 4 ஆயிரத்து 524 ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது. எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு இலங்கையில் முன்னெடுக்கப்படும் உணவு திட்டத்திற்கு இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதியுதவி வழங்குவது தொடர்பான கடிதத்தை உலக உணவு திட்டத்தின் வதிவிட பணிப்பாளர் மெடிஸ் லோப்வெல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு தேவையான உணவு தேவையை பூர்த்தி செய்ய உதவியளிக்கப்படும் என இங்கு உரையாற்றிய உலக உணவு திட்டத்தின் வதிவிட பணிப்பாளர் மெடிஸ் லோப்வெல் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசால் உலக உணவு திட்டம் ஊடாக எத்தியோப்பியாவுக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான அரசி ஏற்றுமதி செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply