இலங்கை மீன்பிடி படகு மாலைத்தீவில் மீட்பு
இலங்கை மீன்பிடி படகொன்றை கைப்பற்றியுள்ள மாலைத்தீவு தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் அதில் இருந்து ஐவரை கைது மீட்டுள்ளனர். லவியானி அட்டோல் என்ற கடற்பகுதியில் வைத்து மாலைத்தீவு மீன்பிடி படகொன்றால் இலங்கை மீன்பிடி படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இலங்கை மீன்பிடி படகு தற்போது கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதென மாலைத்தீவு தேசிய பாதுகாப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மாலைத்தீவு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து 10 நாட்களுக்கு முன் கடலுக்குச் சென்ற மீன்பிடி படகே மீட்கப்பட்டுள்ளதாகவும் படகில் உள்ள ஐவரும் தேக அரோக்கியத்துடன் இருப்பதாகவும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply