இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு அவுஸ்திரேலியா நிதியுதவி
இலங்கையின் கல்வித் துறை அபிவிருத்திக்கு 34 மில்லியன் டொலர்களை உதவியளிக்க அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தீர்மானித்துள்ளார். இதன்மூலம் சட்டவிரோதமாக அகதி அந்தஸ்த்து கோருவோர் தொகை குறையும் என அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். எதிர்வரும் நான்கு வருடங்கள் இலங்கையில் கல்வித்துறை அபிவிருத்திக்கு 34.35 மில்லியன் அவுஸ்திரேலியா டொலர் நிதி செலவிடப்படும் என அவர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிதி மூலம் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதியுதவிகள் மூலம் பொருளாதார வளர்ச்சி நிலையான சமூகம் ஒன்றை உருவாக்க முடிவதோடு அகதி அந்தஸ்த்து கோருவோரையும் கட்டுப்படுத்த முடியும் என பொப் கார் கூறியுள்ளார்.
இலங்கையை பொருளாதார வளர்ச்சி மிகுந்த நிலையான நாடாக மாற்ற அவுஸ்திரேலியா ஆர்வம் கொண்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் மூன்று நாள் உத்தியோகபூர்வ விழஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இரவு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply